தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

 image

"வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி  மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்” என்று அறிவித்திருப்பதோடு மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.


Advertisement

 image

அக்டோபர் 3 அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, அக்டோபர் 3 லிருந்து 5 வரை வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்” என்றும் கூறியுள்ளது.

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement