’காந்தக் கண்களைத் தேடுகிறோம்’ - சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைப் படம் பற்றி இயக்குநர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் கனவு தேவதையாக இன்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் சில்க் ஸ்மிதா. அவரது வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்குகிறார் சித்ரா லட்சுமணன்.


Advertisement

image

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்ககாலங்களில் இயக்குநர்களின் மனசுக்குப் பிடித்த கவர்ச்சி நடிகையாக வலம்வந்த சில்க்ஸ்மிதா, தென்னிந்திய ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக இருந்தார். 


Advertisement

image

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா, தன் இளம்பருவ வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் அதிகம். எத்தனையோ திருப்பங்கள் நிறைந்த அவரது வாழ்க்கைக் கதையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

image


Advertisement

சித்ரா லட்சுமணன் 

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற வெற்றிப்பட இயக்குநரான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

image

இயக்குநர் மணிகண்டன் 


"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகிய கண்களை உடைய ஒரு பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குநர் மணிகண்டன். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

loading...

Advertisement

Advertisement

Advertisement