ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் பரவிய கொரோனா உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது. ஏழை,பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பினரையும் தாக்கியுள்ள கொரோனா அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை இரண்டு லட்சம் பேர் இறந்துள்ளார்கள்.


Advertisement

image

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இருவரும் விரைவில் குணமடைய பல்வேறு நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் விருப்பம் தெரிவித்துவரும் நிலையில், ட்ரம்ப்புடன் அடிக்கடி வார்த்தை போர் தொடுத்துக்கொண்டிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இருவரும் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துகள்”  என்று செய்தி அனுப்பியுள்ளார், என்பதை வடகொரியாவின்  அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement