கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு: புதிய விதிமுறைகள் என்னென்ன?

New-credit-and-debit-card-rules--What-you-need-to-know

டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி பல புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Advertisement

image

அக்டோபர் 1 முதல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை பாதுகாப்பதற்காக புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி ஏற்கானவே ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யாத கார்டுகளில் புதிய ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யமுடியாது. இனி அவர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை வசதி வேண்டுமெனில், அவர்கள் வங்கியை அணுக வேண்டும்.


Advertisement

மேலும் இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இயல்புநிலையாக எந்த சேவைகளும் கிடைக்காது. அதனால் அட்டைதாரர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பர்வர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் தேவைப்பட்டால் அவர்கள் வங்கியை அணுகி, இந்த சேவைகளை தங்கள் அட்டைகளில் செயல்படுத்துமாறு கோர வேண்டும்.அட்டைதாரர்கள் தங்கள் வங்கி பயன்பாடுகள், செயலி பயன்பாடுகள், கார்டு பயன்பாடுகள் மற்றும் ஏடிஎம்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனைத்து வங்கிகளும் 24x7 சேவையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

image

புதிய வழிகாட்டுதல்களின்படி அட்டை பயனர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ‘சுவிட்ச் ஆப்’மற்றும் “சுவிட்ச் ஆன்” செய்யலாம். சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பர்வர்த்தனைகளுக்கான செலவு வரம்புகளை தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் போன்ற சில அம்சங்களிலிருந்து கூட அவர்கள் விலகலாம்.


Advertisement

ஆபத்து என்றால் வங்கிகள் நடப்பு அட்டைகளை செயலிழக்கச் செய்யலாம், புதிய அட்டைகளையும் வழங்கலாம். அட்டைதாரர் இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் சர்வதேச பரிவர்த்தனைகளை செயல்படுத்த வங்கியின் அனுமதி பெறவேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement