ராணுவ மருத்துவமனையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வெள்ளை மாளிகை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.


Advertisement

image

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெய்லீ மெக்னானி “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன், அதிபரின் மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி வால்டர் ரீட் மருத்துவமனியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அடுத்த சில நாட்களுக்கு பணியாற்றுவார்" என்று கூறினார்.


Advertisement

டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கிறார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் மருத்துவர் சீன் பி. கான்லி, “ அதிபர் நல்ல உற்சாகமாக இருக்கிறார்" என்று கூறினார். 74 வயதான டிரம்ப் தனது வயது மற்றும் அதிக எடை காரணமாக மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார்.

image

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement