ஐபிஎல் இன்றைய போட்டிகள்: பெங்களூரு vs ராஜஸ்தான், டெல்லி vs கொல்கத்தா.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியுடனும், டெல்லி அணி கொல்கத்தா அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.


Advertisement

image

அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும், பெங்களூர் அணி ‌8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ‌

image

அதன்பின் ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், டெல்லி அணி ‌10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ‌

loading...

Advertisement

Advertisement

Advertisement