காவலர்களால் தள்ளிவிடப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி..!

Trinamool-Congress-MP-dismissed-by-police-in-uttar-pradesh

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர தாக்குதலால் உயிரிழந்த பட்டியலினப் பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ.பிரையன் காவலர்களால் தள்ளிவிடப்பட்டார்.


Advertisement

கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற திரிணாமுல் எம்பி டெரிக் ஓ.பிரையன், மற்றும் காகோலி கோஷ் உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றபோது அவர்களை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில், டெரிக் ஓ பிரைன் தள்ளிவிடப்பட்டார்.

image


Advertisement

இறந்த பெண்ணின் குடும்பத்தார் உள்ள பகுதியில் ஒன்றரை கிலோமீட்டருக்கு முன்பாகவே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு எந்த ஆயுதங்களும் இல்லாமல் தனித்தனியே சென்ற தங்களை தடுத்தது ஏன் என்று இவர்கள் கேள்வி எழுப்பினர்.

நேற்று ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இதேபோல தடுத்து நிறுத்தப்பட்டநிலையில், ராகுல்காந்தி காவல்துறையினரால் தள்ளிவிடப்பட்டார். பலியான பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement