அரசியலில் புது திருப்பம்... அக்.6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வர அழைப்பு

ordered-to-admk-MLAs-come-to-Chennai-on-October-6

அக்டோபர் 6-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


Advertisement

கடந்த 28-ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளரை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வருகின்ற 7-ஆம் தேதி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

image


Advertisement

இதைத்தொடர்ந்து அதிமுகவில் சலசலப்புகள் இருந்து வருகின்றன. செயற்குழு கூட்டத்தில் ஒபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் நேரடியாகவே விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்த பிறகு, முதல்வர் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement