செங்கல்பட்டு அருகிலுள்ள நெம்மேலியில் உள்ள கோகுலம் தனியார் பொதுப்பள்ளியில் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பிரபு. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
பள்ளி மாணவர்கள் ஹிந்திப் பாடங்களை எளிமையாக புரிந்துகொள்வதற்கு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார் ஆசிரியர் பிரபு. தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள பாடல் மெட்டுகளின் அடிப்படையில் அவர் ஹிந்திப் பாடல்களைப் பாடி பாடம் நடத்திவருகிறார்.
தமிழ்ப் பாடல்களின் மெட்டில் ஹிந்திப் பாடல்களைப் பாடி யூடியுப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்து, அதனை வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கிறார். அதை அப்படியே கவனித்துப் பாடும் மாணவர்கள் அதிக வரிகளைக் கொண்ட பெரிய பாடல்களையும் மனப்பாடம் செய்துவிடுகிறார்கள்.
உனக்கென்ன வேண்டும் சொல்லு, இதுவரை இல்லாத உணர்விது உள்ளிட தமிழ் சினிமா பாடல்கள் மற்றும் தெலுங்கில் பிரபலமான இன்கேம்... இன்கேம்... காவலா போன்ற பாடல்களின் மெட்டுகளிலும் ஹிந்திப் பாடல்களைப் பாடியுள்ளார் பிரபு. தற்போது அவருடைய புதிய பாணியிலான பாடங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆசிரியர் பிரபு
பள்ளியில் 4,5,7 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு புதிய பாணியில் ஹிந்திப் பாடங்களைக் கற்பித்துவருகிறார். அதேபோல பொது அறிவு தொடர்பான பாடங்களை நடத்திவரும் அவர், சிறந்த பதில்களை அளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிவருகிறார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி