இயக்குநரான தயாநிதி அழகிரி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அருள்நிதி!

Dayanidhi-Alagiri-mask-shortfilm

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி இயக்கியிருக்கும் ’மாஸ்க்’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அருள்நிதியும் சூரியும் வெளியிட்டிருக்கிறார்கள்.


Advertisement

 நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான விஷயங்களையே காமெடியாகவும் கருத்தாகவும் கிண்டலடித்து சிந்திக்க வைத்தது சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம். எதிர்ப்புகள் வந்தாலும் பராவாயில்லை என்று துணிச்சலுடன், இப்படத்தை தயாரித்து ’இளம்’ தயாரிப்பாளாராக சினிமாவிற்குள் நுழைந்தார் தயாநிதி அழகிரி. அதற்கடுத்ததாக, மதுரை பின்னணியைக் கொண்ட தூங்கா நகரம்,  அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா என தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தயாரித்தார்.

image


Advertisement

 தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மதுரை ’சூப்பர் ஜெய்ன்ட்’ அணியின் உரிமையாளராகவும் இருந்து  கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தார். சினிமா, கிரிக்கெட் மட்டுமல்ல; தயாநிதி அழகிரி ஃபுட்பால் ரசிகரும்கூட. அவரது இன்ஸ்டாகிராம், ட்விட்டரை ஃபாலோவ் செய்பவர்களுக்கு நன்கு தெரியும். உலக ஃபுட்பால் நிகழ்வுகளையும் போட்டிகளையும் உடனுக்குடன் அப்டேட் செய்துகொள்வார்.

image

இவை எல்லாவற்றையும் விட ஆகச்சிறந்த புத்தகக் காதலர். அவரது தாத்தா கருணாநிதி போலவே, அவரது பேரன்களில் தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்டவர். கிரிக்கெட்,ஃபுட்பால் போலவே, புத்தகங்களும் அவரது சமூக வளைதளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. ஒவ்வொரு புத்தகத்தையும் படித்துவிட்டு விமர்சனங்களுடன் பகிர்ந்து கொள்வார்.


Advertisement

image

புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட இயக்குநர்களின் திரைப்படங்கள் மற்ற இயக்குநர்களை விட எப்போதும் வித்தியாசமாகத்தான் இருக்கும். தமிழ் சினிமாவின் சிறந்தப் படமான உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும், அசுரன் போன்றப் படங்களே உதாரணம். அந்த வரிசையில் வாசிப்பு பழக்கம் கொண்ட தயாநிதி அழகிரியும் இணைந்திருக்கிறார்.

image

 தயாநிதி அழகிரி தற்போது ‘மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநர் என்ற புதிய முகத்திலும் முத்திரைப் பதிக்கவுள்ளார். கொரோனா சூழலில் மாஸ்க் எப்படி மக்களின் அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளதோ அதேபோல்தான், மாஸ்க் குறும்படமும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான குறும்படம்.

image

 ”இன்றைய கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ள பேருதவியாக இருந்தன.பலவகையிலும்  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு  உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப்  பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க்” என்றிருக்கிறார் தயாநிதி அழகிரி.

 குறும்படத்தை இயக்கி வெற்றி கண்டு சினிமாவிலும் பெரும்படங்கள் இயக்க தமிழ்பட ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

-வினி சர்பனா

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement