அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவிற்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனும் கார சார விவாதங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ட்ரம்புக்கும் அவரது மனைவியான மெலனியாவிற்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனாத்தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை உடனடியாக தொடங்குகிறோம். இருவரும் இணைந்து இதனை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement