மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்    

madurai-chennai-tejas-special-train-service-begin-from-today

சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில்  இன்று முதல் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு மதுரை வந்துசேரும்.


Advertisement

image

திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேசுவரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபா் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.  அதன்படி, சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) இன்று முதல் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு மதுரை வந்துசேரும்.


Advertisement

அதே போல், மதுரை- சென்னை எழும்பூா் தேஜஸ் சிறப்பு ரயில் (02614) இன்று முதல் மாலை 3.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூா் சென்று சேரும். இந்த ரயில்கள் வியாழக்கிழமைகளில் இயங்காது. திருச்சி, கொடைக்கானல் சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement