"நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்" - ராகுல்காந்தி

-I-am-not-afraid-of-anyone--Rahul-Gandhi

மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. அதையொட்டி டிவிட்டரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.


Advertisement

அதில், "உலகில் யாருக்கும்  நான் அஞ்சமாட்டேன். யாருடைய அநீதிக்கும் தலைவணங்கமாட்டேன், பொய்யை உண்மையுடன் வெல்வேன், பொய்யை எதிர்க்கும்போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்கமுடியும். இனிய காந்தி ஜெயந்தி" என்று அவர் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

நேற்று ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க உத்தரவை மீறி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடைபயணம் மேற்கொண்டார் ராகுல்காந்தி. காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டபோது தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இந்த நிலையில், அரசின் அதிகாரத்திற்கும் காவல்துறையின் அத்துமீறலுக்கும் பதிலளிப்பதைப்போல அவர் காந்தி ஜெயந்தி வாழ்த்துச்செய்தியை பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement