தலைவர்கள் பயணிக்க தனி விமானம் - அதிர வைக்கும் சிறப்பம்சங்கள்

Air-India-One-PM-High-tech-New-Plane-Landed-in-Delhi


குடியரசுத்‌ தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பி‌‌ரதமர் பயணிக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து வாங்‌க‌ப்பட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய விமானம் டெல்லி வந்தடைந்தது.


Advertisement

ஏர் இந்தியா ஒன் விமானங்களை போயிங் நிறுவனத்திடம் இருந்து 8,400 கோடி ரூபாய் செலவில் இந்தியா இந்த விமானத்தை வாங்கியிருக்கிறது. முன்னதாக இரு விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்‌பட்ட நிலையில், முதல் விமானம் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது. அதிநவீன தகவல் தொடர்பு பாதுகாப்பு வசதிகள் இவ்விமானத்தின் சிறப்பம்சங்களாகும். அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை போன்றே இவ்விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், ஏர் இந்தியா ஒன் விமா‌னத்திலும் இடம் பிடித்‌திருக்கிறது. போயிங் விசி‌ 25 ஏ என்ற வகையை சேர்ந்த ஏர் போர்ஸ் ஒன் 3 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்‌ட விமா‌னம். அதனுடன் ‌ஒப்பிடுகையில் இந்திய பிரதமர் பயணிக்கும் ஏர் இந்திய‌ ஒன் விமானம் போயிங் 777 வகையை சேர்ந்தது.

 

ஏர்போர்ஸ் விமானத்‌தில் கூட்ட ‌அரங்கு, படுக்கையறை, சமைய‌ல் அறை, ரகசி‌ய பாதுகாப்பு அறை, விருந்தினர்‌களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு ஆகியவை இருக்கின்றன. ஏர் இந்தியா ஒன் விமானத்திலும் மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதற்கு த‌னி அறை இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு, விருந்தினர்களுடன் விவாதிப்பதற்கான அறைகளும் இடம் பிடித்திருக்கின்றன. தொலைபேசி, கணினி, இணையம் என சகல தகவல் தொடர்பு வசதிகளையும் அடக்கியது ஏர் போர்ஸ் ஒன். இந்திய பிரதமர் பயணிக்கு‌ம் ஏர் இந்தியா ஒன் விமானத்திலும் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன.


Advertisement

 

image

ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் ஏர் இந்தியா ஒன்னுக்கும் இருக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் ‌தூர‌ம் வரை அமெரிக்க அதிபரின் ஏர் போர்ஸ் விமானம் பறக்கும். அதே போல இந்திய தலைவ‌ர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் விமானமும் தொடர்ந்து 17 மணி நேரம் வரை எங்கும் இடைநில்லாமல் பறக்கக் கூடியது. அதாவது இந்தியாவில் இருந்து புறப்பட்டால் எங்கும் நிற்காமல் நேரடியாக அமெரிக்‌காவு‌க்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

KXIP VS MI : டாப் 10 தருணங்கள்

தேவைப்பட்டால் ஏர் போர்ஸ்‌ ஒன் போல, ஏர் இந்தியா ஒன் விமானத்திற்கும் நடுவானில் எரிபொருள் நிரப்ப முடியும். அமெரிக்க அதிபரின் ஏர் போர்ஸ் ‌ஒன் விமானம் மணிக்கு 630 மைல் முதல் 700 மைல் வேகத்தில், 45 ஆயிரத்து 100 அடி உயரத்தில் பறக்கும் என்‌றால், இந்திய பிரதம‌ரின் ஏர் இந்தியா ஒன் விமானம், மணிக்கு 560 மைல் வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அதிநவீன மின்னணு போர்‌கருவிகள் கொண்ட அறைகளும் இருக்கின்றன. இதன் மூலம், வானில் தாக்குதல் நடத்த வரும் விமானத்தை எளிதாக எதிர்கொண்டு பதில் தாக்குதல்‌ நடத்துவதுடன், தாக்குதலையும் தடுத்து ‌நிறுத்த முடியும். எதிரிகளின் ராடார் அலைவரிசையை முடக்குவதற்கான நவீன வசதிகளும் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏர் இந்தியா ஒன் விமானத்தை போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா வாங்கியிருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement