அதிரடி காட்டிய பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யா - மும்பை அணி அபார வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சா‌ப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. வெற்றியை எட்டும் முனைப்போடு ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. ரோகித், பொல்லார்டு, ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


Advertisement

image

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தியது. ஆனால் அந்த பரபரப்பு ஆட்டம் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நடப்பு சீசனில் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்‌ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 14 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ‌11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌ என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement