வாங்கிய கடனுக்காக வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ்... வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை செலுத்துமாறு வங்கியின் மூலம் அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

 

image


Advertisement

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (25). இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூபாய் 5 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் குமார் தனது தந்தையிடம் உடனே பணத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறியதோடு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மகேஷ் குமாரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement