சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 8பேர் உட்பட 10பேர் விடுதலை...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தோனேசியாவை சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேரை விடுதலை செய்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

 

 


Advertisement

image

 


சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேரை இதுவரை சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி அவர்களை விடுதலை செய்து இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement


கடந்த பிப்ரவரி மாதம் இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்த சைலானி, சித்திரோகனா, ரமலான் பின் இப்ராஹீம், அமன் ஜகாரியா, முகமது நசீர் இப்ராஹிம், கமரியா, மரியானா சுமிசினி ஆகிய 8 பேரும் அவர்களுக்கு உதவியதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஷ்ரப் அலி மூமின்அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

image

 


இவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் சுகாதார சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் ஜெ.எம் 2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ஜெ.எம் .2 நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார் அந்த தீர்ப்பில் இதுவரை இவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement