கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா: விதிமுறைகளை கடைபிடிக்க கோரிக்கை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் இரண்டாம் நாளாக 8,000 கடந்து மேலும் 8,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்தது.


Advertisement

 

 


Advertisement

image

 


கேரளாவில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 15ஆயிரம் கடக்க வாய்ப்புள்ளதாக கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நான்காயிரத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு புதன்கிழமை 8,000 கடந்து முதன்முறையாக அதிகபட்சமாக 8,830 பேருக்கு பாதிப்பு உறுதியனது. இரண்டாம் நாளாக இன்று 8,000 கடந்து 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

 

 

image

 


அதில் 7,013 பேருக்கு தொடர்புகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,828 பேர் குணமடைந்துள்ளனர். முதன்முறையாக அதிகபட்சமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்து 2,04,241 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 72,339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,072 ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோழிக்கோட்டில் 1,072 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

 

image

 இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 40 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் அதிகம் என தெரியவந்துள்ளது. அவர்கள் தான் விதிமுறைகளை மீறுபவர்கள் என்பதால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும், பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement