ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வெற்றியை எட்டும் முனைப்போடு ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சா‌ப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நடப்பு சீசனில் தலா 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்‌ளன.

Kings XI Punjab Vs Mumbai Indians, Live Cricket Score, IPL 2020: MI Wary Of  Marauding KXIP


Advertisement

இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வி கண்டுள்ளதால் வெற்றி முகத்திற்கு திரும்பும் முனைப்பில் ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ‌11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

இந்நிலையில், மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வெற்றியை எட்டும் முனைப்போடு ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement