‘ஆறு நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டோம்" சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃபிளெம்மிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆறு நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங்.


Advertisement

image

நடப்பு ஐபிஎல் சீஸனில் மும்பை, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணியுடன் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி நாளை ஐதராபாத் அணியுடன் நான்காவது லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. சுமார் ஆறு நாட்கள் ஓய்விற்கு பிறகு சென்னை அணி இந்த போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஓய்வு நாட்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஃபிளெம்மிங்.


Advertisement

image

“அடுத்ததாக நாங்கள் விளையாட உள்ள ஆட்டங்களில் என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவு கிடைத்துள்ளது. அது தொர்பாக பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.  தொடர்ந்து ஐந்து போட்டிகள் துபாயில் ஆட உள்ளதை சாதகமாக பார்க்கிறோம். அதன் மூலம் பிட்ச் கண்டீஷனை நன்றாக அறிந்து கொண்டு அதற்கேற்ற படி சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். 

இந்த சீஸனின் துவக்கம் கொஞ்சம் பின்னடைவாக இருந்திருந்தாலும் அதிலிருந்து அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்ய இந்த ஆறு நாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம். அதே போல அனுபவ வீரர்கள் ராயுடு மற்றும் பிராவோ அணியில் இணைவது பலம் தான்” என தெரிவித்துள்ளார் ஃபிளெம்மிங்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement