பயங்கர சத்தத்துடன் வானில் வட்டமிட்ட போர் விமானம்: பீதியடைந்த மக்கள் !

Suddenly-a-war-plane-circled-in-the-sky-with-a-terrifying-noise-----People-in-fear-----

வேதாரண்யம் பகுதியில் தாழ்வாக பறந்த பயிற்சி போர் விமானத்திலிருந்து வெண்புகையுடன் பயங்கர சத்தம் கேட்டதால் பொது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

 

 


Advertisement

image

 


தஞ்சாவூரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் ரபேல் ரக பேர் விமானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரக விமானங்கள் மூலம் தஞ்சாவூர், வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement


கடந்த சில வாரங்களாக இந்த ரக விமானங்கள் ஒன்று. இரண்டு என வானில் வேகமாக சென்று வட்டமிட்டு வருகிறது இந்த நிலையில இன்று வேதாரண்யம் பகுதியில் இரண்டு பயிற்சி போர் விமானங்கள் தாழ்வாக பறந்து அடிக்கடி வட்டமிட்டு சென்றது.

 

 

image

இதனால் வானில் புகையுடன் கூடிய வெண்மை நிறத்தில் அகன்ற கோடு தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் வெடிகுண்டு வெடித்ததைப் போன்ற பெருத்த சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தம் வடமழை மணக்காடு நாகக்குடையான், செட்டிப்புலம், கரியாப்பட்டினம் உம்பளச்சேரி, துளசாபுரம் போன்ற பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிகழ்வு வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழையூர் சுற்று வட்டார பகுதிகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால் 50 கிலோ மீட்டர் சுற்று பகுதியில் வசிக்கும் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement