13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கட்டாய கருக்கலைப்பு... உறவினர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சண்டிகர் மாநிலம், பிலாஸ்புர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை, 18 வயதான உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் கர்ப்பமான அந்தப் பெண்ணை கருக்கலைப்பு செய்யுமாறு அந்த இளைஞரின் பெற்றோர் கட்டாயப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

அந்த பெண் பெல்கானா பகுதியில் தனது உறவினர் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த உறவுக்காரர் மகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண் கர்ப்பமாகி இருக்கிறார். இது தெரிந்த அந்த இளைஞரின் அம்மா, அப்பா மற்றும் தாத்தா ஆகிய மூன்று பேரும் அருகிலிருக்கும் கோர்பா மாவட்டத்திற்கு கருக்கலைக்க கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

image


Advertisement

அந்த பெண்ணை பார்க்க தாயார் வந்தபோது, தனது தாயாரிடம் அனைத்தையும் கூறி அழுதிருக்கிறார். இதனால் அந்த குடும்பத்தினர்மீது கோபமடைந்த தாயார், திங்கட்கிழமை கோட்டா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், அந்த இளைஞர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


மேலும் இந்திய சட்டப்பிரிவுகள் 376(பாலியல் வன்கொடுமை) மற்றும் 313(பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3பேர் கைது 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement