‘இது ஒருபோதும் தாமதமில்லை’.. சி.எஸ்.கே. எழுச்சி ட்வீட்...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
மற்றொரு இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ இது ஒருபோதும் தாமதமாகாது’ என நம்பிக்கை ட்விட்டை பதிவிட்டுள்ளது சிஎஸ்கே. 
 
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.
 
இந்நிலையில் நடப்புத் தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடிய தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணி. இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது. புள்ளிப்பட்டியல் சரிவிலிருந்து மேலே வர நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது அந்த அணிக்கு அவசியமானதாகும்.
 
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி திரும்பி நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ‘மற்றொரு இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ இது ஒருபோதும் தாமதமில்லை’ என பதிவிட்டுள்ளது.
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement