”முறுக்கு மீசையில் நடிகர் நட்டி” - இன்ஃபினிட்டி படத்தின் போஸ்டர் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் நட்டி நடித்திருக்கும்  ”இன்ஃபினிட்டி” படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


Advertisement

 

image


Advertisement

சதுரங்கவேட்டை படம் மூலம் பிரபலமடைந்த பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நடராஜன் என்ற நட்டி ”  இன்ஃபினிட்டி” என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

நட்டியுடன் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  

படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரப்பரப்பாக நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  நட்டி வித்தியாசமான தோற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement