கேரள நெல்வயலில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான அரியவகை மீன் குடும்பம் கண்டுபிடிப்பு..!

Rare-fish-family-discovered-in-paddy-fields-of-Kerala

கேரளாவின் நெல்வயல்களில் நன்னீர் மீன்களின் புதிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்கள் பிரிந்தபோதிலிருந்து வாழ்ந்துவரும் மீன்வகையாக இந்த மீன்வகை கருதப்படுகிறது.


Advertisement

image

புனே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்), கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் (குஃபோஸ்), கேரளாவின் நிர்மலகிரி கல்லூரி, லண்டன் மற்றும் பெர்னியில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், ஜெர்மனியின் செங்கன்பெர்க் இயற்கை வரலாற்றுத் தொகுப்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், புதிதாக கண்டறியப்பட்ட இந்த மீன்வகை அனிக்மச்சன்னிடே என்ற மீன் குடும்பத்தின் ஒருவகை என்று கண்டறிந்துள்ளனர்.


Advertisement

சி.டி ஸ்கேன் மற்றும் விரிவான பகுப்பாய்வு மூலம் ஆய்வுசெய்த விஞ்ஞானக் குழுவானது, இந்த மீன்வகையின் பழமையான பண்புகளைக் கண்டறிய முயற்சிசெய்தது. இதன் மூலம் இந்த மீன்வகை மண்ணுக்கடியில் புதைந்துவாழும் தன்மைகொண்டது என கண்டறிந்துள்ளது. நீளமான உடலுடன் கூடிய இந்த மீன், கடந்த ஆண்டு வடக்கு கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தின் நெல் வயல்களில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மட்டுமே காணப்பட்டது.

image

கேரளாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன் குடும்பத்தில் இன்னொரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது பூமிக்கு அடியில் வாழ்கிறது. ஆனால் இதன் சகோதர இனங்கள் மேற்கு, மத்திய ஆபிரிக்கா பிராந்தியங்கள் மற்றும் ஆசியாவில் பொது மேற்பரப்பு நீர்நிலைகளில் வாழ்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

கேரளாவில் சுமார் 10 வகையான புதிரான நிலத்தடி மீன் இனங்கள் இருப்பதாக அறியப்பட்டாலும், இங்கு அனிக்மச்சன்னிடே எவ்வாறு இங்கு வாழ்கிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. குறிப்பாக 2018 ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவுகளைத் தொடர்ந்து, நிலத்தடியிலிருந்து இந்த மீன் வெளிப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement