ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை மரணத்தைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹத்ரஸ் சம்பவத்தில் நிர்பயா வழக்கைப் போலவே மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உத்தரபிரதேச போலீஸ் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் உடலை எரித்ததாகக் கூறினாலும், சில வீடியோக்கள் போலீஸாரின் அராஜகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன் பதவியை ராஜினாமா செய்யும்படி நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வலியுறுத்தி வருகின்றனர்.
உ.பி: இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரது குடும்பத்தினரே செய்ததாக பாஜக வீடியோ வெளியீடு!
இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்று மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையில் இறங்கியுள்ளதால், சம்பவம் நடந்த கிராமத்தைச் சுற்றி 1.5 கிமீ தூரத்திலேயே மீடியாக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
SIT (Special Investigation Team) came to the district yesterday. They had visited the village and met the victim's family. They had even inspected the crime spot. The team is still in the village, meeting the family and carrying out further investigation: #Hathras SP Vikrant Vir pic.twitter.com/pg87Fwx3Sc — ANI UP (@ANINewsUP) October 1, 2020
இதற்கிடையே பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை இன்று சந்திப்பதாகக் கூறியிருந்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவருடன் செல்வதாக தகவல்கள் வெளியானது.
Borders of Hathras are sealed. Section 144 of CrPC has been imposed in the district, more than 5 people are not allowed to gather. We've no information about Priyanka Gandhi's visit. SIT will meet the victim's family members today, media will not be allowed: Hathras DM P Lakshkar pic.twitter.com/bU3MXLre7x — ANI UP (@ANINewsUP) October 1, 2020
ஆனால் ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் நுழைய தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பி.லக்ஷ்கர் கூறுகையில், ஹத்ராஸ் மாவட்டத்தின் எல்லைகள் மூடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது. சிறப்பு விசாரணை குழு இன்று அந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவுள்ளது. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது. பிரியங்கா காந்தி இங்கு வருவதைப் பற்றி இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனக் கூறியுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'