மீஞ்சூரில் உள்ளூர் நபர்களுடன் கைகலப்பு: வாகனங்களுக்கு தீவைத்த வடமாநில தொழிலாளர்கள்.!

minjur-north-indian-labours-fire-to-vehicle-in-riot

மீஞ்சூர் அருகிலுள்ள காட்டுப்பள்ளியில் உள்ளூர் நபர்களுடன் தகராறில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர்.


Advertisement

image

மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் நேற்று இரவு இறால் பண்ணைக்குள் நுழைந்ததாக் சொல்லப்படுகிறது. இதனால் இறால் பண்ணை ஊழியர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறால் பண்ணை ஊழியர்கள் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பை அடித்து நொருக்கியுள்ளனர்.


Advertisement

தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அருகில் உள்ள வடமாநில ஊழியர்கள் தங்குமிடத்திலிருந்து கூட்டமாக வந்த வடமாநில தொழிலாளர்கள் மூன்று இறால் பண்ணை ஊழியர்களை தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கண்டெய்னருக்கு தீவைத்துள்ளனர்.

image

இதன்காரணமாக ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இறால் பண்ணை ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement