ராஜஸ்தான் வெற்றிப்பெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி.


Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில் 34 பந்துகளில் 47 ரன்களை எடுத்து அவுட்டானார். சுனில் நரேன் 15 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். கொல்கத்தா அணியின் கேப்டன் 1 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றமளித்தார்.

image


Advertisement

ராஜஸ்தான் அணியின் பந்து வீச சிறப்பாக இருந்ததால் கொல்கத்தா வீரர்கள் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். இறுதியாக மார்கன் மட்டுமே 34 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது கொல்கத்தா. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் காண்கிறது ராஜஸ்தான்.

loading...

Advertisement

Advertisement

Advertisement