28 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள டிஸ்னி நிறுவனம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல கார்ட்டூன் படங்களுக்கு புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான டிஸ்னி தீம் பார்க், சுமார் 28 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் 67% ஊழியர்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட உள்ளவர்களில் பலருக்கு பகுதிநேர வேலையும், சிலர் தினசரி சம்பள ஊழியர்களாக வேலைசெய்ய அனுமதித்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய இதுதவிர வேறு வழியில்லை என கூறியுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், குறிப்பிட்ட அளவு பணியாளர்களை மட்டுமே வைத்து இயக்கமுடியும் என டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டி அமாரோ கூறியுள்ளார்.

image


Advertisement

இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் எடுக்கப்படும் கடினமான முடிவுகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பும்போது நிலைமைகள் சரிசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா உயிரிழப்பு நேரடி எண்ணிக்கையை இந்தியா வெளியிடுவதில்லை - ட்ரம்ப் 

நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு ஊழியர்கள்தான் முழுக்காரணம். அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நாங்கள் முயற்சி எடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement