சிஎஸ்கே அணிக்காக அம்பத்தி ராயுடுவும், பிராவோவும் எப்போது விளையாடுவார்கள் என்ற கேள்விக்கு அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்த அம்பத்தி ராயுடு காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல ஆல் ரவுண்டர் பிரோவோவும் இதுவரை களமிறக்கப்படவில்லை.
இது குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள காசி விஸ்வநாதன் "ராயுடு காயத்தில் இருந்து முழுமையாக குணமாகிவிட்டார். அவர் அடுத்தப் போட்டியில் பங்கேற்பார். பயிற்சியின்போதுதான் ராயுடுவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இப்போது வலைப்பயிற்சியில் ராயுடு சிறப்பாக விளையாடினார்" என்றார்.
மேலும் "பிராவோ இல்லாத குறையை சாம் கரன் போக்கினார். பிராவோ பயிற்சியின்போது சிறப்பாக பந்துவீசினார். அதில் அவருக்கு சிரமம் ஏதும் இல்லை. விரைவில் அவரும் அணியில் இடம்பெறுவார்" என்றார். சிஎஸ்கே தனது அடுத்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை வரும் வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?