பீச்சில் ஆனந்த பயிற்சி... வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற தெலுங்குப் படங்களுக்குப் பிறகு ராஷ்மிகா, தென் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகி பல ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியுள்ளார். அவரது சூப்பர் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பிடிக்காதவர்கள் இல்லை.


Advertisement

ராஷ்மிகா தற்போது கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் அவர், தனது உடல் கட்டமைப்பை மேம்படுத்த, கடும் உடற்பயிற்சிகளையும் செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு கோவாவில் தனது உணவுகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு தனது அனுபவங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘’இது எனது முதல் பீச் உடற்பயிற்சி. இதுதான் முதன்முறையாக நான் பீச்சில் செய்யும் உடற்பயிற்சி. மிகவும் சோர்வடையச் செய்தாலும் இங்கிருந்து செல்லும் எண்ணம் வராது. கடலலையின் சத்தம்... கடலின் வாசனை... சூரியன் மறைவதைப் பார்ப்பது... காலில் படியும் மணல்... இவை அனைத்தும் அழகானவை’’ எனக் குறிப்பிட்டு தனது நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர் பற்றியும் அதில் கூறியுள்ளார்.

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ: தீர்மானம் நிறைவேற்றிய ராதாரவி! 


Advertisement

தற்போது கார்த்தியுடன் சுல்தான் என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்திருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement