கிருஷ்ணகிரியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நோயாளிகளை தன் இனிமையான குரலால் மகிழ்விக்கும் மாற்றுத்திறனாளி பாடகர்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை அதே குரல் வளத்துடன் பாடியதால் பிரபலமானவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வை மாற்றுத் திறனாளியான இவர் நல்ல குரல் வளம் கொண்டவராக உள்ளார்.
இவரின் குரல் வளத்தை கண்டு ஆச்சரியமடைந்த இசையமைப்பாளர் இமான் தனது இசையில் பாட வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பர்கூரில் உள்ள கொரோனா தனிமைபடுத்தப்பட்ட வார்டில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தம் நீங்க திருமூர்த்தி இசை வாசித்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார். பிறவியிலேயே கண்பார்வை இல்லை என்றாலும் நல்ல குரல்வளம் உள்ளதால் அதன் மூலம் திருமூர்த்தி அனைவரையும் மகிழ்வித்து வருவது மிகவும் பாராட்டு கூடிய விஷயமாக உள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி