சமூக அக்கறையோடு வித்தியாசமாக பிறந்தநாளை கொண்டாடிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொள்ளாச்சியில் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர் முகக்கவசம் கபசுர குடிநீர் கொடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 


Advertisement

image

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்போடு தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த நவீன்குமார். 


Advertisement

image

தனது 28-வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தியவாறு தனது நண்பர்கள் உதவியுடன் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கோவை சாலை, காந்திசிலை சந்திப்பு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கியதோடு அவர்களுக்கு கொரோனா எனும் கொடிய நோயின் பாதிப்பு குறித்தும் விளக்கமளித்தார். அத்துடன் அவர்களிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகளையும் பெற்று கொண்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement