அமேசான் பிரைமின் புதிய குறும்பட தொகுப்பை இயக்கும் கவுதம் மேனன், கார்த்தி சுப்புராஜ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கவுதம் மேனன், கார்த்தி சுப்பராஜ், சுதா கொங்கரா உள்ளிட்ட ஐந்து இயக்குநர்கள் அமேசான் பிரைமில் 'புத்தம் புது காலை' என்ற குறும்பட தொகுப்பினை இயக்கவுள்ளனர்.


Advertisement

image

அமேசான் பிரைம் விரைவில் தமிழ் ஆந்தாலஜி எனப்படும் குறும்பட தொகுப்புகளை வெளியிடவுள்ளது. தென்னிந்திய திரையுலகின் பிரபலமான  ஐந்து இயக்குநர்களால் இந்த “புத்தம் புது காலை”  குறும்பட தொகுப்பில் ஐந்து குறும்படங்கள் இடம்பெறும். இக்குறும்படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த, உணர்வுமிக்க-நல்ல கதைகளை சித்தரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி இயங்குதளம் இது குறித்த ஒரு சுருக்கமான டீஸரையும் வெளியிட்டுள்ளது. இதில் திரைப்பட இயக்குநர்களான சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ்மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் தங்களது சொந்த குறும்படங்களை உருவாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஓடிடி ஸ்ட்ரீமிங் இயங்குதளம் இந்த ஆண்டில் இத்தொகுப்பை வெளியிடும்.  அமேசான் பிரைம் தற்போது பிராந்திய மொழிகளில், தரமான படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement