மத்திய பிரதேசம் போபாலில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போபால் அயோத்யா நகரில் பிறந்து இரண்டே நாட்களான பெண் குழந்தையை 100 முறைக்கும்மேல் ஸ்க்ரூ ட்ரைவரால் குத்தி, ஒரு துப்பட்டாவில் சுற்றி கோவிலில் வீசி சென்றிருக்கின்றனர்.
இதுகுறித்து அயோத்யா நகர் காவல் நிலைய அதிகாரி ரேணு முராப் கூறுகையில், செடம்பர் 24ஆம் தேதி காவல் நிலையத்திற்கு காலை 7 மணியளவில் ஒரு குழந்தை துப்பட்டாவில் சுற்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றபோது, யாரோ குழந்தையை துப்பட்டாவில் சுற்றி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் விரித்துப் பார்த்த எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் உடல்முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இரவில் யாரோ குழந்தையை விட்டுச்சென்றதால் மிருகம் தாக்கியிருப்பதாக நினைத்தோம். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில், ஸ்க்ரூட்ரைவரால் அந்த குழந்தையை 100 தடவைக்கும் மேல் குத்தியிருப்பது தெளிவாக தெரியவந்தது.
இந்த கொலைக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கோவிலுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமிராக்களில் ஏதேனும் தடயம் கிடைக்குமா எனத் தேடிவருகின்றனர். அந்த குழந்தை வீட்டில் பிறந்திருக்கவேண்டும் எனவும் சந்தேகிக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுவரை 3 பெண் குழந்தைகள் இதுபோன்று கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற தவறிவிட்டோம் - கொந்தளிக்கும் பாலிவுட் நடிகைகள்
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!