முகக்கவசத்தில் தங்கம் கடத்திய விமானப்பயணி கைது -வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

என்-95 முகக்கவசத்தில் 40 கிராம் தங்கம் கடத்திவந்த விமானப் பயணி கோழிக்கோடு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

 image

கேரளாவில் அணிந்திருந்த என்-95 முகக்கவசத்தில் 40 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்ற ஒரு விமானப்பயணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கரிபூரில் அமைந்துள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது, இந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இலிருந்து கோழிக்கோடுக்கு பயணம் செய்தவர் என்று தெரியவந்துள்ளது.


Advertisement

இவர் முகக்கவசத்தில் தங்கம் கடத்த முயன்றபோது கோழிக்கோடு விமான நிலையத்தின் விமான புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. ரூபாய் . ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த தங்கத்தை கடத்திய நபர் கர்நாடகாவின் பட்கல் நகரைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களில் தற்போது அதிக அளவிலான தங்கக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகின்றன. செப்டம்பர் மாத தொடக்கத்தில், சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த ஒரு பயணி, பிரஷர் குக்கரில் 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதற்காக விமான புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement