‘வெள்ளைக்கார நபரை நேசிப்பதால், இந்தியராக வெட்கப்படுகிறேன் என்று அர்த்தமல்ல’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் வருங்கால மனைவி வினிராமன் தெரிவித்துள்ளார்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது சீசன் நடந்துவருகிறது. சமூக ஊடகங்களில் ஐபிஎல் அணியில் உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஐபிஎல் போட்டிகள் மற்றும் வீரர்களின் செயல்திறன் குறித்து தொடர்ந்து பதிவிட்டு உற்சாகப்படுத்து வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் வெறுப்பு கருத்துக்களாலும் சமூகவலைதளங்களில் தாக்கபடுகின்றனர்.
செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் வருங்கால மனைவியான வினி ராமன், க்ளெனுடன் இருக்கும் ஒரு படத்தைப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. அதில் ஒரு பயனர், வெள்ளைக்காரரான மேக்ஸ்வெல்லுடன் வினிராமன் இருப்பதை விரும்பவில்லை, மேலும் நீங்கள் ஒரு இந்திய பையனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த வினி “இதுபோன்ற கருத்துக்களுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை, ஏனெனில் ட்ரோல்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இதைச் செய்கின்றன. ஆனால் 6 மாத பொதுமுடக்கம் எனக்கு பல பாடங்களை கற்பதற்கு நிறைய நேரம் ஒதுக்கியுள்ளது. வித்தியாசமான தோல் நிறத்தில் இருக்கும் ஒருவரை நேசிப்பது உங்களை பாதிக்காது. ஒரு வெள்ளை நபரை நேசிப்பது என்பது ஒரு இந்தியராக நான் வெட்கப்படுகிறேன் என்று அர்த்தமல்ல. ஒரு வெள்ளை நபரை நேசிப்பது எனது விருப்பம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. ” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் க்ளென், வினி பகிர்ந்த இந்த பதிவினை மீண்டும் பதிவிட்டார். வினி தைரியமாக இருப்பதற்காக மேக்ஸ்வெல் அவரை பாராட்டினார்.
இந்த ஆண்டு மார்ச் 17 அன்று மேக்ஸ்வெல் தனது நீண்டகால காதலி வினி ராமனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?