டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிரான நேற்றைய போட்டியில் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றிய ஹைதராபாத் அணியின் தமிழக வீரர் நடராஜனை பாராட்டியுள்ளார் பிரெட் லீ
இது தொடர்பாக பிரெட் லீ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ஒரு இன்னிங்ஸின் இறுதியில் எப்படி பந்துவீசவேண்டும் என்றால், இப்படித்தான். மிகச்சிறப்பான பந்துவீச்சு நடராஜன்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற எளிதான இலக்கினை விரட்ட ஆரம்பித்த டெல்லி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி அணியின் பினிஷரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சரிந்து கொண்டிருந்த டெல்லியை வெற்றி பாதைக்கு மீட்டெடுப்பார் என எதிர்பார்த்தபோது, தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் டெலிவெரியில் LBW முறையில் 11 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ரிவீவ் சென்றபோதும், அதிலும் அவர் விக்கெட் உறுதியானது ஸ்டொயினிஸை மட்டுமின்றி, டெல்லி அணியை ஏமாற்றத்தில் தள்ளியது.
இந்த விக்கெட் காரணமாக 20 ஓவர் முடிவில் 147 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததது டெல்லி அணி. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசன் ஐபிஎல்லில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
Loading More post
திரிணாமுல் புகார் எதிரொலி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை அகற்ற நடவடிக்கை
திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?