அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் மாதவன்?!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அல்லு அர்ஜுன் நடிக்கும் ’புஷ்பா’ படத்தில் வில்லனாக மாதவன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி  இருக்கிறது.


Advertisement

கடந்த வருடம் தெலுங்கின் முன்னணி இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தின் அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளியானது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கட்டை கடத்தல் சம்மந்தப்பட்ட இக்கதையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

image


Advertisement

பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தேதிகள் சரியாக இல்லாததால் விஜய் சேதுபதி பின்வாங்கினார்.

image

இந்நிலையில், ’சாக்லேட் பாய்’ என்று சொல்லப்படும் மாதவன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக மாதவன் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என்று வித்யாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

 ’புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராக உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement