5ஆம் கட்டத் தளர்வுகளுடன் அக்.31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

5-ஆம் கட்டத் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொதுமுடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 144-ன் கீழ் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து இருக்கும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக் கடைபிடிக்கப்படும்.


Advertisement

தேனீர் கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி. பார்சல் சேவைக்கு இரவு 10 வரை அனுமதி. 
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் 100 வெளிமாநில விமானங்கள் தரையிறங்க அனுமதி. இதுதவிர கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

அரசு மற்றும் அரசு சார் பயிற்சி நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதி.


Advertisement

சுய விருப்பத்தின்பேரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement