மதுரை மானகிரிசாவடி தெரு பகுதியில் வசித்து வருபவர் 80 வயது மூதாட்டி தெய்வானை. இவருக்கு அழகர்சாமி, மருதுவீரன் ஆகிய இரு மகன்கள். இளைய மகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் மூத்த மகன் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று, 6 மாதங்களாகியும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இருவரின் மனைவியும் பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டனர். இதனால் மூத்த மகனின் 9 வயது மகள் மற்றும் 5 வயது மகன், இளைய மகனின் 10 வயது மகள் என மூன்று சிறார்களுக்கும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் 80 வயதான பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய அவர்களது பாட்டியின் ஆதரவில் உணவிற்கே வழியில்லாமல் அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பசியை போக்கி வருகின்றனர்.
அக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு தினசரி விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம்
குடும்பத்தின் வறுமையை உணர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான மணிமேகலை மற்றும் அவரது சகோதரியான 4ம் வகுப்பு மாணவி ஸ்வேதா ஆகிய இருவரும் பாடப்புத்தகங்களை கையில் வைத்து படிப்பதை விட்டுவிட்டு பிஞ்சு கரங்களால் மலர்களை கட்டி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் 30 அல்லது 40 ரூபாயை கொண்டு தங்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். எதிர்க்காலத்தில் படித்து ஆசிரியராக ஆக வேண்டும் என்ற கனவோடு கல்வியில் ஆர்வம் செலுத்தி வரும் இவர்களுக்கு போதிய பாதுகாப்பும் பொருளாதாரமும் இல்லாத நிலையில் இந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
பூக்களைக் கட்டி கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயைக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்கி தாங்களாகவே சமைத்து சாப்பிட்டு பசியைப் போக்கி கொள்வதாகவும் சில நாட்கள் மட்டுமே 3 வேளை உணவு உண்ண முடிவதாகவும் பெரும்பாலான நாட்களில் 2 வேளை மட்டுமே உணவு உண்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். வேலை, சமையல் என இருக்கும் நிலையில் கிடைக்கும் நேரத்தில் கல்வியிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.
வயதான காலத்திலும் தங்களுக்கு துணையாக உள்ள தனது பாட்டியின் காலத்திற்கு பின்னர் தங்களுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள் என எதிர்காலத்தை எண்ணி கவலையடைவதாகவும், மாதம் 2500 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களால் கடந்த 6 மாதமாக வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
தாலியால் தகராறு: கணவனை குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி
கல்வியிலும் விளையாட்டிலும் மட்டுமே கவனத்தை செலுத்தவேண்டிய இளம்பருவத்தில் தங்களது பசியையும், தம்பி மற்றும் பாட்டியின் பசியையும் போக்க வேலைசெய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் ஆதரவு இல்லாததால் தங்களது எதிர்காலத்தை எண்ணி கவலையடைவதாகவும் துயரத்துடன் கூறுகின்றனர்.
உணவுக்கே வழியின்றி தவிக்கும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு அடுத்த மாதம் பள்ளி திறந்தால் செல்வதற்கு வழி கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனவே யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
பூக்கள் கட்டி வாழ்க்கை நடத்தும் தங்களின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் துணைபுரியுமா என்று ஏக்கத்துடன் காத்து இருக்கின்றனர் இந்த இளம் மொட்டுகள்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?