நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியால் 500 ரன்களை குவிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஆர்சிபி அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றது. ஆனால் கேப்டன் விராட் கோலி 11 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே சேர்த்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் "நாம் அனைவருக்கும் தெரியும் கோலி ஒரு கிளாஸான பேட்ஸ்மேன் இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்குள் அவர் 400 முதல் 500 ரன்களை எடுப்பார்.ஒவ்வொரு ஆண்டும் கோலி அதனை செய்து வருகிறார். ஒரு ஐபிஎல் தொடரில் அவர் ஆயிரம் ரன்களை நெருங்கினால். மேலும் அந்தத் தொடரில் அவர் 4 சதங்களையும் அடித்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் "இந்தத் தொடரில் இப்போது வரை 3 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ரன்களை குவிக்க தொடங்கவில்லை. நிச்சயம் சிறப்பாக விளையாடி அவர் இந்த ஐபிஎல்லில் 500 ரன்களை எடுப்பார்" என்றார் சுனில் கவாஸ்கர்.
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?