அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். 


Advertisement

 

image


Advertisement

முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகலில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியானது. இது மட்டுமன்றி ஓபிஎஸ் சொந்த ஊரான தேனிக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன் ஓபிஎஸ் உடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். 

image


Advertisement

முன்னதாக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்த சூழலில் இன்று ஆலோசனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு தெரியும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement