'கோயில் அறிவிப்பு பலகையில் அறங்காவலர் விவரங்கள்' அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Details-of-temple-trustees-should-be-printed-in-announcement-banner-HC-directs-TN-Government

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

image

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்ற அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவில், கோயில் அறங்காவலர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் கோயில் அறிவிப்பு பலகைகளில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டது.


Advertisement

image

இதற்கிடையில் மற்றொரு வழக்கு ஒன்றில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நியமன உத்தரவு இல்லாமல் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் இருந்து கோவில் நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement