புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஜிப்மர் தனியாக நுழைவுத்தேர்வை நடத்திவந்தது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இந்த கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்கு தனித்தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.mcc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
'இவர்தான் என் வாழ்க்கையை மாற்றியவர்': இயக்குநர் பாண்டிராஜ்
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி