முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக செயற்குழுவில் காரசார விவாதம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூனறு மணி நேரத்துக்கும் மேலாக அதிமுக செயற்குழு நடந்துவருகிறது. அங்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடும் விவாதம் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.


Advertisement

செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும், சில மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளரை இன்றே முடிவெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

image


Advertisement

மேலும் வழிகாட்டுக் குழு அமைப்பதற்குப் பதிலாக கட்சியை நிர்வகிக்கக் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். செயற்குழுக் கூட்டம் தொடங்கிய உடனே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement