கொடைக்கானலில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக சுற்றுலாதினம், கொடைக்கானல் சுற்றுலாத் துறையால் கொண்டாடப்பட்டது. கொடைக்கானலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், உலக சுற்றுலாதினம் சுற்றுலாத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் உள்ளூர் சுற்றுலா சார்ந்த அமைப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கொடைக்கானல் சுற்றுலாவில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. 


Advertisement

image


ஏற்கெனவே உள்ள சுற்றுலா தலங்களில் கழிவறை வசதி, வாகன நிறுத்தம் ஏற்படுத்துதல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும் புதிய சுற்றுலா தலங்களை கிராம பகுதிகளில் ஏற்படுத்த அவர்களால் சுற்றுலாத்துறைக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்யும் நபர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

loading...

Advertisement

Advertisement

Advertisement