'உயர் அதிகாரிக்கு சல்யூட்..': கொரோனாவால் உயிரிழந்த ஆம்பூர் எஸ்.ஐ-ன் மனைவி நெகிழ்ச்சி.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது கணவருக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.பி.யிடம், தனது கணவர் பணியில் எப்போதும் மரியாதையுடன் இருப்பார் என்பதற்கு சான்றாக தங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் என்றார்.


Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம் (வயது 51. இவர் கடந்த 12ஆம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் 24 ஆம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சண்முகத்திற்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து  கொரோனா  வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

image

இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தார். பிபிஇ கிட் அணிந்து, இறந்த சண்முகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது சண்முகத்தின் மனைவி திலகவதி, உயரதிகாரிகளுக்கு தனது கணவர் எப்போதும் மரியாதையுடன் இருப்பார் என்பதை தெரிவிக்கும்விதமாக எஸ்.பி. விஜயகுமாருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இது அங்கிருந்த காவலர்களுக்கிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  


Advertisement

உதவி ஆய்வாளர் சண்முகத்திற்கு திலகவதி என்ற மனைவியும் மற்றும் 1 மகள்  2 மகன்கள் உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement