சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக்க வேண்டும் - தயாநிதி மாறன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என்ற தயாநிதி மாறன் பேச்சுக்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.


Advertisement

image

மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Advertisement

விழாவில் பேசிய தயாநிதி மாறன் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்தையும் அரசு திறந்து விட்டுள்ளது என்றும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும் பேசினார். மேலும் பேசிய அவர் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என்று  கூறினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி “ தயாநிதி மாறன் சொன்னதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கில்லை என்றும் அந்தத் தகுதி தலைவருக்கும் தமிழக மக்களுக்குமே உள்ளதாக கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement