திருச்சி பெரியார் சிலை அவமதிப்பு: அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 திருச்சியில் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளதற்கு தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் , திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.image


Advertisement

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்” திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

image

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியின் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைமீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ளனர். மேலும் அவர்கள் பெரியார் சிலைக்கு காலணி மாலையும் அணிவித்து அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement